பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிற்கு பேராபத்து ஏற்படும்- திமுக வேட்பாளர் அருண்நேருவிற்கு வாக்கு சேகரித்த தொல்.திருமாவளன் பேச்சு…!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் கொளுத்தும் வெயிலில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.
அப்போது தொல்.திருமாவளவன் பேசியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அ.தி.மு.க.வை மட்டும் எதிர்க்கட்சியாக கருதியிருந்தால் தமிழகத்தோடு பிரச்சாரத்தை நிறுத்தி இருக்கலாம். அகில இந்திய அளவில் பா.ஜ.க.விற்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக “இந்தியா’ கூட்டணியை உருவாக்கி, தற்போது ராகுல்காந்தியோடு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் அத்வானியும், அம்பானியும் மட்டுமே வளர்ந்துள்ளனர். மோடி ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகள் இருக்காது. 100 நாள் திட்டம் இருக்காது. பா.ஜ.க.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிற்கு மிகப்பெரிய பேராபத்து ஏற்படும்.
அம்பேத்கர் வகுத்து வைத்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து ஏற்படும். அரசியலமைப்புச் சட்டம் சொல்கிற சகோதரம், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு,
அரசியல், நீதி, சமத்துவம் போன்றவைகளுக்கு ஆபத்து ஏற்படும். அந்த சட்டத்தை ஒழித்து விடுவார்கள். விவசாயிகளுக்கு எதிராக பா.ஜ.க. சட்டம் கொண்டு வந்துள்ளது. தற்போது தலைநகரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் ஆதரவோடுதான் பல்வேறு சட்டங்களை பா.ஜ.க.கொண்டு வந்துள்ளது. சிறுபான்மை வாக்குகளுக்காக அ.தி.மு.க.- பா.ஜ.க. ரகசிய கூட்டணி அமைத்துக் கொண்டு தனித்து நிற்கின்றனர். பெரியாரின் தொண்டனாக, அண்ணாவின் வளர்ப்பாக, கலைஞரின் வாரிசாக வந்தவர்தான் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகள் இருக்கும்.100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் உயர்த்தி தரப்படும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி நிறைவேற்றுவார்கள்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, இட ஒதுக்கீட்டை உயர்த்திப்பிடிக்கும் அறிக்கையாக உள்ளது. அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்படும். பெண்களின் வாழ்க்கைத் தரம் உயரும் அறிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரச்சாரத்தில், பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல பொறுப்பாளர் இரா.கிட்டு, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரத்தினவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லத்தம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், வேப்பந்தட்டை ஒன்றிய தலைவர் க.ராமலிங்கம், துணைத் தலைவர் எம்.ரெங்கராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன் ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், வ.சுப்ரமணியன், அ.அப்துல்கரீம், ஆர்.அருண், மா.பிரபாகரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பா.ரினோபாஸ்டின்,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.ராசா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ) அப்துல் பாரூக் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தோழமைக்கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.