Rock Fort Times
Online News

‘எனக்கு உடல்நிலை சரியில்லை’- ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி மனுத்தாக்கல்…

சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்யும் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்தார். இந்நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை, தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார். இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்