Rock Fort Times
Online News

சிவகங்கையில் பயங்கரம்: சொகுசு காரில் மது அருந்திய 2 வாலிபர்கள் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை…!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் கொடிக்காடு கண்மாய் பகுதிக்கு ஒரு சொகுசு காரில் வந்தனர். அங்குள்ள ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் காரை நிறுத்திவிட்டு, அதன் அருகே அமர்ந்து அவர்கள் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பகுதிக்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் வந்தனர். அவர்கள் காரின் அருகே அமர்ந்திருந்த வாலிபர்களை நோக்கி ஆக்ரோஷமாக பாய்ந்தனர். உடனே இரண்டு வாலிபர்களும் எழுந்து ஓடினர். இருந்தாலும் அவர்களை விரட்டிச் சென்ற அந்த மர்ம கும்பல் அவர்களை சரமாரியாக வெட்டியது. இதில் தலை சிதைந்த நிலையில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர், அந்த மர்ம கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 வாலிபர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட வாலிபர்கள் யார், அவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டனர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் சிவகங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்