தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(13-03-2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது. அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க இயலாது என நீதிபதிகள் கூறினர். மேலும், செந்தில் பாலாஜியின் மனுவுக்கு ஏப்ரல் மாதம் 25ம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்க துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்க முடியாது என செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.