அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு…!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சி.வி.சண்முகம். கடந்த முறையும் வெற்றி பெற்ற இவர், அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் அதிமுக ஆட்சியைப் பிடித்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிமுக தோல்வியை தழுவியது. இதற்கு அதிமுக தலைமை எடுத்த தவறான முடிவே காரணம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர் கொடி தூக்கியவர்களில் முக்கியமானவர். அதோடு திமுக ஆதரவோடு, அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமி முடிவுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தவர்.
இந்நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், ஆகவே, தனக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது என்னை கொலை செய்ய எதிர்க்கட்சியினர் முயற்சித்தனர். அப்போது எனது சகோதரரும், மைத்துனரும் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப் பின், எனக்கும், எனது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. 2021ம் ஆண்டு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது தொடர்ச்சியாக மிரட்டல்கள் வருவதால்
மீண்டும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார்.

Comments are closed.