தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு செய்து வருகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையின் படி, 6 தேர்வுகளில் 5 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அவற்றில் குரூப் 1, 2, 2ஏ ஆகிய 3 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி அக். 6ம் தேதியில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டு, டிச. 20 ம் தேதியில் தேர்வு நடைபெறும். கடந்த 2024 ம் ஆண்டில் 4,662 காலியிடங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், நடைபாண்டில் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தாண்டில் குரூப் 4 தேர்வுக்கு சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.