பயணிகளுக்கு இனிப்பான செய்தி: ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு 6000 சிறப்பு ரயில்கள் இயக்கம்: இந்திய ரயில்வே அறிவிப்பு…!
ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை 6000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
வேலை நிமித்தமாகவும், உயர்கல்வி காரணமாகவும் வெளியூர்களில் தங்கி உள்ளவர்கள், பிற மாநிலங்களில் தங்கி உள்ளவர்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வது வாடிக்கை. அவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இந்நிலையில் அக்டோபர் 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆயுத பூஜையும், 12- ம் தேதி (சனிக்கிழமை) விஜயதசமியும் வருகிறது. அடுத்த நாள் 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளாகும். அதேபோல அக்டோபர் 31ம் தேதி ( வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.மேலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பண்டிகைகள் அணிவகுத்து வருகின்றன. இதனால், வெளியூர்களில் தங்கி உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்தியன் ரயில்வே நிர்வாகம் 6000 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.