தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக சர்வதேச விமான நிலையங்களில் முக்கியமானதாக திருச்சி ஏர்போர்ட் இருந்து வருகிறது.இங்கிருந்து மலேசியா சிங்கப்பூர் துபாய் உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிற்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி ஏர்போர்ட்டில் திருட்டுத்தனமாக கொண்டுவரப்படும் கடத்தல் தங்கம் சிக்கிக்கொள்வது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்தவகையில் துபாயிலிருந்து பயணியொருவர் கடத்தி வந்த ரூ. 33.23 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து இலங்கை வழியாக திருச்சி வந்த ஸ்ரீலங்கன் விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் பயணித்த பயணிகளில் ஒருவர் தனது அடிவயிற்றில் பசை வடிவிலான 462 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த தங்கத்தை சுங்கத் துறைறயினர் பறிமுதல் செய்து அப் பயணியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் மதிப்பு ரூ. 33.23 லட்சமாகும்.
Comments are closed.