திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவணக் காப்பக ஏடிஎஸ்பியாக பணியாற்றி வந்த வெள்ளத்துரை ஓய்வு பெற ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், மே 30ம் தேதியான நேற்று சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
லாக்-அப் மரணம் தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள சூழலில், ஏடிஎஸ்பி வெள்ளதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகரில் உள்ள பாலக்கரை காவல் நிலையத்தில்தான் வெள்ளத்துரை முதன்முதலில் எஸ்ஐயாக பணியில் சேர்ந்தார்.
அப்போது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர்தான் இந்த வெள்ளத்துரை.
1997ம் காலக்கட்டத்தில் லெஸ்பியன் விவகாரத்தில் சிக்கிய காக்கி அம்மணியை கல்யாணம் செய்துகொள்வதாக கூறி ஊர்சுற்றி, அவரை ஏமாற்றிய சம்பவத்தில் துவங்கி, மகளிர் சுய உதவிக்குழு நடத்திவந்த பெண் ஒருவருடன் லாட்ஜில் ரூம் போட்டு தங்கியிருந்த போது, சக காவலர்களாலே கையும் களவுமாக சிக்கியது உள்ளிட்ட ஏகப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர் இந்த வெள்ளத்துரை. பெண்கள் விவகாரத்தில் வெரி ஒர்ஸ்ட் ஆளான வெள்ளத்துரை, ரவுடிகளை ஒடுக்குகிறேன் பேர்வழி என அதிரடி ஆக்ஷன் சீன் போட்டு ஏகப்பட்ட ஆண்டிகளை உஷார் செய்த சர்ச்சையில் சிக்கினார். இதன்காரணமாக சென்னைக்கு தூக்கியடிக்கப்பட்டார்.
அப்போதைய சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் ஐபிஎஸ் புண்ணியத்தில் அயோத்திகுப்பம் வீரமணி என்கவுன்டர் டீமில் வெள்ளத்துரையும் சேர்த்துக்கொள்ளப்பட, மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். பிறகு சந்தன கடத்தல் வீரப்பன் வதம் செய்யப்பட்ட விவகாரத்தில், இறப்பு சம்பவம் நடந்த அந்த வேனின் முன் இருக்கையில் அமர்ந்து சென்ற ஒரே காரணத்திற்காக வெள்ளத்துரைக்கும் டபுள் புரமோஷன் வழங்கப்பட்டது.
வீரப்பன் என்கவுன்டர் செய்யப்பட்ட அன்று, குறிப்பிட்ட அந்த வேனில் ஏறுவதற்கு முன்பு வரை வீரப்பனை நேரில் பார்த்திராத வெள்ளத்துரை, வீரப்பன் காடு எப்படி இருக்கும் என்று அறிந்திராத வெள்ளத்துரை, நான் தான் வீரப்பனை கொன்றேன் என்கிற ரேஞ்சுக்கு ஏகத்துக்கும் பில்டப் கொடுத்து பேட்டியெல்லாம் கொடுத்தார்.
இது காவல் உயரதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. வெள்ளத்துரையை நேரில் அழைத்து லெப்ஃட் அண்ட் ரைட் வாங்கவே, அது முதல் பந்தா செய்வதை நிறுத்தி பவ்யமானார்.
சிறிது காலம் அடக்கி வாசித்த வெள்ளத்துரை, தனக்கு உள்ள என்கவுன்டர் ஆபிசர் என்கிற புகழை மிஸ்யூஸ் செய்ய ஆரம்பித்தார். கூலிப்படையினர் மற்றும் ரவுடிகளை மிரட்டி வசூல் செய்ய ஆரம்பித்தார். இது காவல்துறை தலைமைக்கு தெரியவரவே, அதுமுதல் அதிகாரம் இல்லாத டம்மி பதவிகளில் மட்டுமே வெள்ளத்துரை தொடர்ந்து பணியமர்த்தப்பட்டு வந்தார்.
அரசியல் ஆசையும் இவரை விட்டுவைக்கவில்லை. கடந்த 2021ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெள்ளத்துரையின் மனைவி அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். தமிழக காவல்துறையின் நேர்மையான இந்த செயலை பொதுமக்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
Comments are closed.