Rock Fort Times
Online News

திருச்சியில் துணிகரம் : பேராசிரியையிடம் தங்கச் சங்கிலி பறிப்பு…

3 மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சேவியர் பெனிடிக். இவரது மனைவி பேபி நிர்மலா ( வயது 50). இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து ஜி கார்னர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் 3 பேர் இவரது கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்