திருச்சி மாவட்டம் ஜீயபுரம் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று ( 24.06.2023 ) அதிகாலை 2 மணி அளவில் ஜீயபுரம் மெயின் ரோடு பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்துக்கிடமாக ஒரு பயணிகள் ஆட்டோ வந்தது. அந்த ஆட்டோவை போலீஸ்காரர் செல்லத்துரை மடக்கினார். அப்போது ஆட்டோவில் 3 ஆடுகளும், ஒரு சிறுவனும் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த சிறுவன் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடி விட்டான். இதுகுறித்து ஆட்டோ டிரைவாிடம் விசாரணை நடத்திய போது ஆட்டோவில் ஆடுகளை கடத்திச் செல்வது தெரிய வந்தது. அதன்பேரில் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் . ஆட்டோவும் போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆட்டோ டிரைவரும், சிறுவனும் ஆடுகளை எங்காவது திருடினார்களா?, அதனை எங்கு கடத்தி சென்றனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.