திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், கே.புதுக்கோட்டை கிராமம் பொம்மகம்மாவூர் களத்துவீடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (40). இவரது மகள் யுவன்யா(6). தங்கவேலின் சகோதரர் ராமசந்திரன்(37) சிறுமியை தனது டிராக்டரில் ஏற்றிக்கொண்டு தோட்டத்தில் உழவுப் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது டிராக்டரில் அமர்ந்திருந்த சிறுமி எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த சிறுமியை மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து வையம்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.