Rock Fort Times
Online News

விஜயகாந்த் தலைமையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம்: தே.மு.தி.க. பொதுச் செயலாளராக பிரேமலதா நியமனம்…

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில், தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை திருவேற்காட்டில் விஜயகாந்த் தலைமையில் இன்று ( 14.12.2023 ) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் விஜயகாந்த் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சொன்னபடி அவர், இன்று செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். அவரைப் பார்த்ததும் தொண்டர்கள் உற்சாக மிகுதியால் கேப்டன் வாழ்க என்று குரல் எழுப்பினர். பின்னர் அவரது தலைமையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடந்தது.

இதில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் , மாநில ,மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்திற்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்தை ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரேமலதா தேர்வு செய்யப்பட்டது குறித்து அறிவிக்கப்பட்டதும் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும், தேமுதிக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதும் பிரேமலதா, விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் பிரேமலதா உரையாற்றினார். விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரைப் பற்றி பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால் அதனை முழுமையாக மறுத்த பிரேமலதா நிச்சயமாக விஜயகாந்த் பூரண குணமடைந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்திப்பார் என்று அறிவித்து இருந்தார். அவர் சொன்னபடியே செய்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்