Rock Fort Times
Online News

கௌதம் அதானி நிறுவன பங்குகள் தொடா் சரிவு..

 

இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமான அதானி குழுமம் சமீபத்தில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வந்த நிலையில், அதானி குழும பங்குகள் தரை தட்டின. எனினும் இந்த சரிவினை மீட்டு எடுக்க அதானி குழுமம் அதிரடியான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதனிடையே, அதானி குழும நிறுவன பங்குகள் தொடர்ந்து சரிய தொடங்கியுள்ளது. அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்றும் சரிவைச் சந்தித்து வருகின்றன. அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 10லட்சம் கோடிக்கு மேல் சாிந்துவிட்டது. அதன்படி கடந்த டிசம்பாில் ரூ.12,40,353 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இன்று ரூ.4,33,297 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு மாதமாக அதானி குழும பங்குகள் தொடர் வீழ்ச்சியால் கோடீஸ்வரர் பட்டியலில் அதானி சரிவை சந்தித்து வருகிறார். உலக கோடீஸ்வரர் பட்டியலில் தொழிலதிபர் கௌதம் அதானி 35வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்