திருச்சி, கருமண்டபம் பகுதியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஆய்வாளர் சுப்புலட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் உமா சங்கரி தலைமையில் போலீசார் தீரன் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக இரண்டுபேர் டூவீலரில் வந்துள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் ஒரு கிலோ எடையுள்ள கஞ்சா இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், கஞ்சாவை கடத்திவந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் ஒருவரின் பெயர் பிரகாஷ் மற்றும் மற்றொருவரின் பெயர் மனோஜ் என்பதும் இவர்கள் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
Comments are closed.