திருச்சி இ.பி. ரோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தாத்தா நாகராஜ் இ.பி.ரோடு அண்ணா நகர் பகுதியில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி கார்த்திக் (21), விஜய் என்கிற விஜயகுமார் ( 20 ), சுந்தர் என்கிற சுந்தரமூர்த்தி, சூரிய பிரகாஷ் ஆகிய நான்கு பேரும் அவரது கடைக்கு இரவு சாப்பிட சென்றனர். அப்போது, அவர்கள் இட்லிக்கு கூடுதல் சாம்பார் கேட்டு நாகராஜிடம் தகராறில் ஈடுபட்டனர். தாத்தாவிடம் சண்டை போடுவதை கண்டு கல்லூரி மாணவர் கதிர்வேல் அவர்களை தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த நான்கு பேர் கொண்ட கும்பல் நாகராஜ் மற்றும் அவரது பேரன் கதிர்வேல் ஆகியோரை அடித்து உதைத்து விட்டு தப்பி சென்றனர். இதில் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஜோதி, விஜய் ,சுந்தர் ஆகிய மூன்று பேரையும் கோட்டை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். சூரிய பிரகாசை தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.