திருச்சி, காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளியில், மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் 29-08-2024 மற்றும் 30-08-2024 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. மருத்துவர் சிபு வர்கீஸ் எம்.எஸ். தலைமையில் நடந்த இந்த மருத்துவ முகாமில் தலை சிறந்த கண் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 2000-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்து தகுந்த ஆலோசனை கூறினர்.

30-ம் தேதி, பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் மருத்துவர் சிபு வர்கீஸ் கலந்துகொண்டு தாமரை பன்னாட்டு பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாண்ட்போர்ட் மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் செல்போன் அதிகம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும், அதனால்தான் மாணவப் பருவத்திலேயே பார்வை குறைபாடு ஏற்படுகிறது என்று கூறினார். முடிவில் பள்ளி முதல்வர் அருட் சகோதரர் இராபர்ட் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.


Comments are closed.