தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி. உதயநிதி ஸ்டாலினை போல திரைப்படம் தயாரித்து வந்த இவருக்கு கடந்த டிசம்பர் 6-ம் தேதி திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனே அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர், புனர்வாழ்வு பயிற்சிக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் 14ம் தேதி துரை தயாநிதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையுடன் புனர் வாழ்வு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்து இருந்த துரை தயாநிதியை சிஎம்சி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறை சந்தித்து நலம் விசாரித்தார். அதேபோல திமுக துணைத்தலைவரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழியும்,
துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த துரை தயாநிதி இன்று(24-09-2024) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதனை அடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் துரை தயாநிதியை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அதனை படம் எடுக்க முயன்றனர். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் படம் எடுக்க விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.