Rock Fort Times
Online News

திருச்சி விமானத்தில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு ஆமைக்குஞ்சுகள் பறிமுதல் 

மலேசியாவில் இருந்து தனியார் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மதுரை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பயணிகள் 3 அட்டை பெட்டிகளில் அடைத்து வெளிநாட்டு ஆமைக்குஞ்சுகளை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விமான நிலையத்திற்கு வந்த வனத்துறையினர் ஆமைகளை பார்வையிட்டனர். அப்போது 3 அட்டை பெட்டிகளில் 6000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஆமைக்குஞ்சுகள் இருந்தன. அதனை மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பும் முயற்சியில் விமான நிலைய அதிகாரிகளும், வனத்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதனை கடத்தி வந்த 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்