அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு வெற்றி நிச்சயம் டியூஷன் சென்டர் சார்பாக விருது வழங்கும் விழா !
காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு திருச்சி இ.பி.ரோடு வேதாத்திரிநகரில் செயல்பட்டு வரும் வரும், வெற்றி நிச்சயம் டியூஷன் சென்டர் சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில், அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஜெயங்கொண்டம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி. சத்யராஜ், பெங்களூர் சீனியர் கிளவுட் டி.பி.ஏ. ஸ்பெஷலிஸ்ட் சாகுல் , திருச்சி காவேரி மருத்துவமனை டாக்டர் ராகேஷ் மனோகரன், பி.எச்.இ.எல் பயர் வால் அண்ட் சேஃப்டி சப் இன்ஸ்பெக்டர் ஜே.தமிழ்மணி மற்றும் சமூக சேவகர் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக வெங்கடேஸ்வரன் வரவேற்று பேசினார். விழாவில், வெற்றி நிச்சயம் டியூஷன் சென்டர் நிர்வாகிகள் சமஸ்பிரான் எம்.ஆர்.வி.நல்லுசாமி (தமிழ்நாடுஅரசுபோக்கு வரத்துகழகம்) , வினோத், எஸ்.பாலா, ஜே.ஜீவா, ஆர். வெங்கட், சக்திவேல் எஸ்.ஹரிஹரன் மற்றும் எம்.வசந்தகுமார் உள்ளிட்ட ஏராளமான மாணவ,மாணவிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.