மயிலாடுதுறை அருகே வெடி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராமத்தில் ராமதாஸ் என்பவருக்கு சொந்தமான வெடி குடோன் உள்ளது. இங்கு நாட்டு வெடிகள், வான வெடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வெடி குடோனில் இன்று( 04.10.2023 ) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.
Comments are closed, but trackbacks and pingbacks are open.