Rock Fort Times
Online News

விரல் ரேகை பதிவு பிரச்சனை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு புது உத்தரவு…

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கான பணி நடைபெற்று வரும் நிலையில், விரல் ரேகை பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என ஒரு சில ரேஷன் கடை ஊழியர்கள் கூறுவதாக அரசுக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. இதுதொடர்பாக தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினரது விரல் ரேகை வைக்கப்படும் போது ஆவணங்கள் எதுவும் கேட்கக்கூடாது. ரேஷன் கார்டுதாரர்களின் வசதியின்படி ரேஷன் கடைக்கு வந்து, விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். மாறாக, கட்டாயப்படுத்தி கடைக்கு அழைத்து சிரமம் ஏற்படுத்த கூடாது. விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளவில்லை எனில், பொருட்கள் வழங்கப்படாது என்ற தவறான தகவலை கூறக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்