Rock Fort Times
Online News

வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்…

திருச்சி அரியாறு, கோரையாறு, பழைய கட்டளை, புதிய கட்டளை, உய்யக்கொண்டான், குடமுருட்டி ஆறு, கொடிங்கால் ஆறுகளில் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது பெரும் பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆகவே , வெள்ள பாதுகாப்பு விரிவாக்க சாலை திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி செயல்படுத்திட வேண்டும், திருச்சி லால்குடி நந்தியாறு திட்டங்களை செயல்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி உயர்மட்ட தடுப்பணை கட்டி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் மா.ப சின்னத்துரை தலைமையில் பொதுநல அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் திருச்சி கோர்ட் அருகே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி , இதுகுறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியதன்பேரில் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்