பிரபல சினிமா டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பிறந்த நாள் விழா…!
விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே.ராஜா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்...!
ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களை வைத்து புரட்சிகரமான படங்களை இயக்கியவர் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர். பிரபல நடிகர்
விஜய்யின் தந்தையான இவரது 82-வது பிறந்தநாள் விழா சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா கலந்து கொண்டு எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மலர் கிரீடம் மற்றும் மலர் மாலை அணிவித்து வாழ்த்து கூறினார் .
பின்னர், சென்னை சாலிகிராமம் மந்திர் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு கேக் மற்றும் புடவைகளை ஆர்.கே.ராஜா சார்பில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வழங்கினார். மேலும், சென்னை விஜய் மாறன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கி அங்கு வந்த ரசிகர்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்கினார். விழாவில், ரவிராஜா, திருவண்ணாமலை பாரதி, கன்னியாகுமரி ஜோஸ் பிரபு , புதுக்கோட்டை ஸ்டாலின் மாஸ்கோ, காஞ்சிபுரம் ராதாகிருஷ்ணன் , நாகை பத்ரிநாதன், மண்ணச்சநல்லூர் சுரேஷ், மதுரை மகேஷ், ராமநாதன், மணிராஜ் , கடலூர் ராஜா, மத்திய சென்னை சிவபிரகாசம், அப்துல் , புதுக்கோட்டை மாரியப்பன், ரஞ்சித் , வேலூர் மணிகண்டன் , அருண், கார்த்தி , கோவிந்தன், குடியாத்தம் வெங்கடேஷ், பொள்ளாச்சி தன்வீர் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.