Rock Fort Times
Online News

திருச்சியில் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. அவ்வுணவகத்திற்கு வந்த நபர் ஒருவா் சாப்பிட்டு விட்டு அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு, அதில் சில குறைகள் உள்ளது. இதற்கு அபராதமாக ரூ.1,00,000/- அரசுக்கு கட்ட வேண்டும். இல்லையெனில், தான் கூறுகின்ற செல் நம்பருக்கு ரூ.10,000/- அனுப்புமாறு கூறியுள்ளாா்.   உணவகத்தினர்   உரிமையாளர் வந்ததும், அனுப்புகிறோம் எனக்கூறியுள்ளனா்.

அதன் பிறகு அங்கு வந்த உணவகத்தின் உரிமையாளர்,  உணவு பாதுகாப்பு அதிகாரியாக வந்தவரை பற்றி விசாரணை செய்த போது, அந்த நபர் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி இல்லை என தெரியவந்துள்ளது.  உடனடியாக   உணவகத்தின் உரிமையாளர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண் 9487464651 -ஐ தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . வீ. வருண்குமார் ஐபிஎஸ் , ஒரு தனிப்படையினை நியமித்து உணவகத்திற்கு வந்த போலி நபரை பிடிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில் தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு, உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி வந்த  திருச்சி திருவெறும்பூர் தாலுகா, வடக்கு காட்டூர், பாரி நகர், 5-வது தெருவைச் சேர்ந்த சுப்ரமணியம் மகன் திருமுருகன் (44) என்பவரை கைது செய்து, மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். திருமுருகன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், இவர் B.E.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு, சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்சமயம் மண்ணச்சநல்லூாில் ஒரு அகாடமியில் பணிபுரிந்து வருவதாக தெரியவருகிறது. மேலும், இவர் மீது கோயம்புத்தூர், நாமக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆயுத வழக்குகள்,மோசடி வழக்குகள் உள்ளிட்ட  7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் திருமுருகன் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்