திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட இலங்கை தமிழர்கள் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஜெயக்குமாருக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று ( 22.06.2023 ) காலை கண் மருத்துவ பரிசோதனைக்காக ஜெயக்குமார் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். பரிசோதனை முடிந்து மீண்டும் சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன்காரணமாக ஆஸ்பத்திரி வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.