தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஊழியர் அமைப்பின் கிழக்கு கோட்ட செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். சிஐடியூ மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார். விபத்தில்லா மின்வாரியம் அமைத்து மின் ஊழியர் உயிர் காக்க வேண்டும். மின் வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கேங்மேன்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், வட்ட செயலாளர் எஸ்.கே.செல்வராஜ், பொருளாளர் பழனியாண்டி, கோட்ட நிர்வாகிகள் ராஜா, தர்மலிங்கம், மணிகண்டன், ஜான், போஸ்கோ, ரவி, டி.என்.பி.இ.ஓ. கோபாலகிருஷ்ணன் ஆகியோர், கலந்து கொண்டு பேசினர். இதில் , மின்வாரிய ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.