ஈரோடு மாவட்டம், சூளை ஜி.கே.ஆர். நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(42). இவர் தனது மனைவி மோகனா (40 ), மாமியார் இந்திராணி( 67) மற்றும் மகள் வருணா(10 ), மகன் சுதர்சன் ( 15), ஆகியோருடன் கடந்த 20ம் தேதி ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றிருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு இன்று(22-07-2024) அதிகாலை ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை கிருஷ்ணகுமார் ஓட்டினார். கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டி கோட்டை என்ற இடத்தில் அதிகாலை 3.30 மணியளவில் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில், கிருஷ்ணகுமாரும் அவரது மகள் வருணா மற்றும் அவரது மாமியார் இந்திராணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.