Rock Fort Times
Online News

சூரிய மண்டலத்தில் சிறிய கிரகம் கண்டுபிடிப்பு…!

சூரியனைச் சுற்றி வரும் பூமி உள்ளிட்ட கிரகங்கள் சூரியக் குடும்பத்தில் அடங்கும். அதேபோல், சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ள நட்சத்திரங்களை சுற்றி வரும் கிரகங்கள் அல்லது வெளிப்புற கோள்கள் எக்ஸோபிளானட்ஸ் என்றழைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், ஒரு காலத்தில் சூரியன் உள்பட 7 கிரகங்கள் மட்டுமே அறியப்பட்ட நிலையில், விஞ்ஞானிகளின் தொடர் ஆராய்ச்சி காரணமாக, சூரிய மண்டலத்திலேயே அதிக தொலைவில் அமைந்துள்ள சனி கிரகத்திற்கும் அப்பால், யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ உள்ளிட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இன்றும் புளூட்டோ கிரகத்திற்கும் அப்பால் கிரகங்கள் உள்ளதா? அவற்றில் உயிரினங்கள் வாழ்கிறதா? என்ற விஞ்ஞானிகளின் சந்தேகம் மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்தநிலையில், புளூட்டோ கிரகத்தையும் தாண்டி, சூரிய மண்டலத்தின் விளிம்பில் ஒரு பெரிய மற்றும் மர்மமான கிரகம் நமது பார்வையிலிருந்து விலகி பதுங்கியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த கிரகத்திற்கு தற்போது ‘பிளானட் நைன்’ (ஒன்பதாவது கிரகம்) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த வாரம், அமெரிக்கா நியூஜெர்சியின் மேம்பட்ட ஆய்வு நிறுவன விஞ்ஞானி சிஹோவோ செங் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவின்படி, இந்த புதிய கிரகம் தோராயமாக 700 கி.மீ. அகலம் கொண்டது. இது புளூட்டோவை விட மூன்று மடங்கு சிறியதாகவும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த கிரகம் தற்போது பூமியிலிருந்து நெப்டியூனை விட மூன்று மடங்கு தொலைவில் உள்ளது என்று கூறியுள்ளார். தொடர்ந்து அந்த கிரகத்தை பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்