மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தங்குடி பகுதியில் 4 நாட்களாகியும் குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரி உளுந்தங்குடி ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடத்தினா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த மண்ணச்சநல்லூர் பேரூராட்சி தலைவர் சிவசண்முககுமார், காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.