Rock Fort Times
Online News

திருச்சியில் 30-ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து: ஏரியா அறிவிப்பு…!

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை(29-08-2024) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக  திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, வெல்-3 மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான சுந்தராஜ நகர்,காஜாமலை, அரியமங்கலம்,  மலையப்பநகர்,  ரயில்நகர், முன்னாள் இராணுவத்தினர் காலனி, மேல கல்கண்டார் கோட்டை, செக்ஸன் ஆபிஸ், நாகம்மை வீதி, நூலக பகுதி, பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யா நகர், ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ் நகர், எல்.ஐ .சி.காலனி, சுப்பிரமணிய நகர், தென்றல் நகர், ஈபி காலனி, வி.என். நகர், சத்தியவாணி முத்து நகர், கே.கே.நகர், ஆனந்த நகர், கே.சாத்தனூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதி நகர், எடமலைப்பட்டிபுதூர், கிராப்பட்டி, அன்புநகர், ரெங்காநகர் , அம்மா மண்டபம், பாலாஜி அவின்யூ, மேலூர், பெரியார் நகர்,  திருவானைக்காவல்,உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர் மற்றும் சிவா நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் விநியோகம் 30.08.2024 ஒரு நாள் இருக்காது.  31ம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்