விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உயிரிழந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் அன்னியூர் சிவாவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாமக வேட்பாளராக சி. அன்புமணியும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மருத்துவர் அபிநயாவும் போட்டியிடுகின்றனர்.
இந்தநிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் தொண்டர்களின் உழைப்பு மற்றும் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என கூறி புறக்கணித்துள்ளது. ஏற்கனவே, அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், தற்போது தேமுதிகவும் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.