திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, திருவானைக்காவல் அருகே உள்ள மேல கொண்டையம் பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் பரணிதரன் (வயது 38). இவருடைய மனைவி திவ்யா(32). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரவுடியான பரணிதரன் மீது 3 கொலை வழக்குகள் மற்றும் 14 -க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. மேலும், ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்தார். திவ்யா, திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று(03-02-2024) வழக்கம் போல பணிக்கு சென்று விட்டார். குழந்தைகளுடன் பரணிதரன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, ஒரு காரில் அங்கு வந்த மர்மகும்பல் அரி வாள்களுடன் பரணிதரன் வீட்டுக்குள் புகுந்தனர்.
பின்னர் அங்கிருந்த பரணிதரனை சரமாரியாக அரி வாளால் வெட்டிவிட்டு காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதில், படுகாயம் அடைந்த பரணிதரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் மற்றும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பரணிதரனின் நண்பர் திருச்சி குழுமணியை சேர்ந்த ஆட்டோ சக்தியின் மனைவி ஆர்த்திக்கும், பரணிதரனுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததும், இதன் காரணமாக பரணிதரனை ஆட்டோ சக்தி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்ததும் தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆட்டோ சக்தி, பாச்சூர் நடுத்தெருவை சேர்ந்த காசிநாதன் மகன் கோபாலகிருஷ்ணன் (35), குழுமணி மெயின் ரோட்டை சேர்ந்த பாஸ்கர் மகன் பார்த்திபன் (28), திருச்சி சங்கரன் பிள்ளை ரோடு பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் முகில்குமார் (26), மேல சிந்தாமணியை சேர்ந்த மயில்ராஜன் மகன் தினேஷ் (24), மன்னார் சாமியின் மகன் தினேஷ்குமார் (25) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.