Rock Fort Times
Online News

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து அக்.31-ல் தி.மு.க மகளிர் அணி போராட்டம்: * மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

சேலத்தில் பட்டப்பகலில் நடந்த கொலை, மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்பு மற்றும் செஞ்சியில் சிறுமி மாயமான விவகாரம் போன்ற தொடர் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக தி.மு.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
வீடியோ கேம்கள் மற்றும் ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் குற்றவாளிகள் எவ்வித அச்சமுமின்றி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், தினசரி கொலைகள் நடக்கும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், இந்தச் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டையும் அரசின் மவுனத்தையும் கண்டித்து, வருகிற அக்டோபர் 31ம் தேதி சனிக்கிழமை திமுக மகளிர் அணி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்