Rock Fort Times
Online News

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்காததை கண்டித்து திருச்சி மாநகராட்சி கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக கவுன்சிலர்கள்…!

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் மு. அன்பழகன் தலைமையில் இன்று (29-09-2026) நடைபெற்றது.துணை மேயர் ஜி. திவ்யா தனக்கோடி, ஆணையர் பொன்மணி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.கூட்டத்தில் மண்டல தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெய நிர்மலா மற்றும் துணை ஆணையர், நகர பொறியாளர், நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாநகராட்சி கூட்டத்திற்கு திமுக கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 5 மாதங்களாக திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் எந்த விதமான அடிப்படை பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. பணிகள் நடைபெற ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வார்டு கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்க கோரியும் கருப்பு சட்டை அணிந்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதேபோல, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் திருவுருவப் படம் அகற்றப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் பிரபாகரன் அம்பேத்கர் படத்துடன் வந்து தனது கண்டனத்தை பதிவு செய்தார். பின்னர் கவுன்சிலர்கள் வார்டு பகுதிகளில் அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்