நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பு தொடர்பாக நிர்வாகிகளை சந்தித்து கலந்தாய்வு நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று (29-12-2024) திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நிகழ்ச்சி திருச்சி-தஞ்சை சாலை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. முன்னதான சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் வேலை செய்யாமல் போவதற்கு காரணம் என்ன?. தமிழ்நாட்டில் திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்ற அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிட கூடாது. எனக்கும் அத்தகைய கோபம் இருக்கிறது. அதற்காக சாட்டையில் அடித்துக் கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்வது தேவையற்றது. தவறு செய்பவர்களையும் அதற்கு காரணமானவர்களையும் தான் சாட்டையால் அடிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, தங்களது தலைமையில் இருக்கக்கூடிய மத்திய அரசை வலியுறுத்தி, கடுமையான சட்டம் இயற்ற சொல்லலாம். அதாவது, யார் ஒருவர் வாக்காளருக்கு பணம் கொடுக்கிறாரோ அவர், 10 ஆண்டுகள் தேர்தல் நிற்க தடை என்ற சட்டத்தை மத்திய அரசை வலியுறுத்தி அண்ணாமலை பெற்று தந்தால், ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கோ, தேர்தலில் நிற்பதற்கோ யாரும் முன் வர மாட்டார்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். அடுத்ததாக, இலவசங்களால் மக்களுக்கு ஒருபோதும் நன்மை விளைய போவதில்லை. அதையும் அண்ணாமலை உணர்ந்து செயல்பட வேண்டும். தூரல் பயிர் வளர உதவாது. அதுபோல, இலவசங்கள் நாட்டுக்கு உதவாது என குன்றக்குடி அடிகளார் சொன்னது போல இலவசங்கள் கொடுப்பதும் நாட்டுக்கு கேடு. இவை இரண்டையும் கணக்கில் கொள்ளாமல் திமுக அரசை தோற்கடிக்க முடியாது. திமுக அரசு தமிழ்நாட்டில் எந்தவித
ஆக்கபூர்வமான சிறந்த திட்டங்களையும் மக்களுக்கு கொடுக்கவில்லை . மாறாக காலை உணவு திட்டம் என்ற பெயரில் வாரத்திற்கு ஐந்து நாட்களும் உப்புமா போடும் அரசாக இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி கோவில், ஜாதியை விட்டு வேறு ஏதாவது பேசி பார்த்திருக்கிறீர்களா?. பெரும்பாலான அமைச்சர்கள் மருத்துவமனை, பள்ளிகளை வைத்திருக்கிறார்கள். எப்படி இருந்தால் எப்படி அரசு மருத்துவமனைகளும்,பள்ளிகளும் தரம் உயரும். திமுகவிற்கு தற்போது ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுக்க கூட தயாராக உள்ளனர். இலவசம் என்பது உலக வளர்ச்சி திட்டம் அல்ல, அது வீழ்ச்சி திட்டம். எனக்கும், திருச்சி போலீஸ்
எஸ்பிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. பல்கலைக்கழகத்தில் எந்த இடத்திலும் சிசிடிவி கேமரா வேலை செய்யாமல் இருப்பது எப்படி?. முதல் தகவல் அறிக்கையில், மாணவியின் குடும்ப ரகசியம் எப்படி கசிந்தது. அவன் செய்த வன்கொடுமையை விட இது பெரிய கொடுமையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.