ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் சிட்டிங் எம்பி நவாஸ்கனி, அதிமுகவில் ஜெயபெருமாள், பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியில் டாக்டர் சந்திர பிரபா ஜெயபால் ஆகியோர் போட்டியிட்டனர். அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 4 லட்சத்து 97 ஆயிரத்து 295 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஓபிஎஸ், 3 லட்சத்து 51 ஆயிரத்து 557 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 82,666 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் சந்திர பிரபா ஜெயபால் 70,770 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும் பிடித்தனர். ஓ. பன்னீர்செல்வத்தை வீழ்த்த சுயேச்சை வேட்பாளராக நான்கு பன்னீர் செல்வங்கள் களம் இறக்கப்பட்டனர். ஓ.பன்னீர் செல்வத்திற்கு இரட்டை இலை சின்னமும் வழங்கப்படவில்லை.அவருக்கு சுயேச்சை சின்னமான பலாப்பழ சின்னமே வழங்கப்பட்டது. அந்த சின்னத்தில் போட்டியிட்ட ஓபிஎஸ் 3 லட்சத்து 51 ஆயிரம் வாக்குகளை கடந்து இருப்பது சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
Comments are closed.