Rock Fort Times
Online News

இன்னும் 48 மணி நேரத்திற்குள் எது வேண்டுமானாலும் நடக்கலாம்-திருச்சி வெற்றி வேட்பாளர் துரை வைகோ பேட்டி…!

திருச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ போட்டியிட்டார்.  இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையாவை விட 3 லட்சத்து 11 ஆயிரத்து 082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியும், திருச்சி மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமாரிடம் பெற்று கொண்டார். அப்போது பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்தார்.  பின்னர், வெற்றி வேட்பாளர் துரை வைகோ  செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறுகையில்,  3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்த ஜனநாயகத்தின் இறுதி எஜமான்களான மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.  இப்படிப்பட்ட ஒரு மாபெரும் வெற்றி வாய்ப்பை தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் அளித்ததற்கு காரணம் நம்முடைய முதல்வர் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமை பெண் திட்டம், பெண்களுக்கு கட்டணமில்லா இலவச பேருந்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தான் காரணம்.  மேலும் ,என்னுடைய வெற்றிக்காக பாடுபட்ட அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அமைச்சர்களின் உதவியுடன் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியோடும் செய்து தருவேன்.  தற்போது தான் தலைவர் வைகோவிற்கு செல்போன் மூலம் வாழ்த்து கூறினேன்.அவர் எனக்கு ஏன் வாழ்த்து கூறுகிறாய், நான் தான் உனக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று என்னை வாழ்த்தினார்(அப்படி கூறும் கண் கலங்கினார்)  பாஜக வெற்றி பெற்றிருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களது பொய் பிரச்சாரமும் மதவாத பிரச்சாரமும் தான்.  இன்னும் 48 மணி நேரத்திற்கு பிறகு எது வேண்டுமானாலும் நடைபெறலாம்.  பொறுத்திருந்து பார்ப்போம்.  இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால்  அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்று தெரிவித்தார்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்