தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. கடந்த முறை அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாரதிய ஜனதா இம்முறை தனித்து கூட்டணி அமைத்துள்ளது. பாரதிய ஜனதா வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியும் அவ்வப்போது தமிழகம் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை (07-04-2024) திருச்சியில் ரோடு ஷோ நடத்த பாஜக சார்பில் தமிழக காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால், சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை காரணம் காட்டி திருச்சி மாநகர காவல்துறை, ஜேபி நட்டாவின் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. மாற்றுப் பாதையை தேர்ந்தெடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
36 மணி நேரத்துக்கு முன்பாக ஆன்லைனில் அனுமதி கோரியிருந்த நிலையில் போலீஸ் அனுமதி மறுப்பதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.