புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கறிஞரணி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம். ஏராளமான வக்கீல்கள் பங்கேற்பு…
ஜனநாயகத்திற்கு எதிராகவும், அரசியலமைப்புக்கு எதிராகவும் கொண்டுவரப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கறிஞரணி சார்பில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மத்திய மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஓம்பிரகாஷ் தலைமை தாங்கினார். ஜாக் கமிட்டி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், திமுக தெற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் தினகரன்,திருச்சி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் நரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஷீலா, வழக்கறிஞரும்,திமுக மாவட்ட பிரதிநிதியுமான வக்கீல் மணிவண்ண பாரதி,வழக்கறிஞர்கள் காரல் விக்டர் வீராசாமி வீரமணி, ஆரோக்கியதாஸ், கென்னடி, காமராஜ், மற்றும் திமுக மகளிர் வழக்கறிஞர்கள் உள்பட முசிறி, துறையூர், மணப்பாறை, லால்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த திமுக வழக்கறிஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தொடர்ந்து திருச்சி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞரணி அமைப்பிளர் ஓம் பிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து முதல்வர்களிடமும் இது சம்பந்தமாக மனு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டி இந்த புதிய மூன்று சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மேலும் நாளை சென்னையில் தமிழகத்தில் இருந்து அனைத்து வழக்கறிஞர்கள் பங்குபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து எட்டாம் தேதி திருச்சியில் அனைத்து வழக்கறிஞர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டங்களை தொடர்ந்து இந்த மூன்று புதிய சட்டங்களும் ரத்து செய்யப்படவில்லை என்றால், தொடர் போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தார்…
Comments are closed.