திருச்சி நீதிமன்றம் முன்பு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் – திடீர் சாலை மறியல் – நூற்றுக்ணக்கானோர் திரண்டதால் பரபரப்பு !
ஓசூர் வக்கீல் கண்ணன் மீதான தாக்குதல் மற்றும் தமிழக வழக்கறிஞர்கள் மீதான தொடர் த்தாக்குதலை கண்டித்து திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்றம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை பி.சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பி.வி. வெங்கட் முன்னிலை வகித்தார். இப்போராட்டத்தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் வக்கீல்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் மதியழகன், இணைச் செயலாளர் சந்தோஷ் குமார், துணைத்தலைவர்கள் பிரபு ,சசிகுமார், பொருளாளர் எஸ்.ஆர். கிஷோர் குமார், செயற்குழு உறுப்பினர்கள் பொன். முருகேசன், கௌசல்யா, பிரியா, எழிலரசி, முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன்,வக்கீல்கள் ஆர்.ராமச்சந்திரன், திருச்சி திலீப், ரமேஷ் சித்ரா விஜயகுமார், ராஜீவ் காந்தி, மோகனப்பிரியா,அருண் கிருஷ்ணா, அருண் பாலமுருகன்,அமலா கஸ்தூரி, ஜாக் செயலாளர் பன்னீர்செல்வம், ஜெ.கோபிநாதன், பாலமுருகன், பிரபு, கண்ணன் ஜெயபால் நவநீத கிருஷ்ணன், புவனேஸ்வரன், முத்துகிருஷ்ணன், குருமுருகன், கதிரேசன், வினோத் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
Comments are closed.