Rock Fort Times
Online News

கண்ணாடித் துண்டால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை முயற்சி – திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு !

திருச்சி அரியமங்கலம் ரயில்நகர், அப்துல்கலாம் ஆசாத்நகரை சேர்ந்தவர் விஜய்.இவரது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 16ம்தேதி கல்லணை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த உதயகுமார் (49) என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரம் பறித்தனர். இது தொடர்பாக, திருவெறும்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விஜய் உள்ளிட்டோரை கைது செய்து செவ்வாய்க்கிழமை ( நவ.19 ) திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில்,நேற்றிரவுமத்திய சிறை வளாகத்தில் இருந்த சுவர்க் கடிகார கண்ணாடியை உடைத்து, அந்த கண்ணாடித் துண்டால் கழுத்தை அறுத்து விஜய் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்டு சக கைதிகள் சப்தமிட்டு அலறினர். உடனடியாக சிறை அலுவலர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் திருச்சி மத்திய சிறையில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்