திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் அதிபரும், முன்னாள் முதல்வருமான அருட்தந்தை முனைவர் ஜான் பிரிட்டோ உடல் நலக்குறைவு காரணமாக நேற்று ( 14.10.2023 ) காலமானார். அவரது மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் அதிபரும், முதல்வரும், செயலாளருமான அருட்தந்தை முனைவர் ஜான் பிரிட்டோ மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் மனம் வருந்தினேன். தாவரவியல் வல்லுநரான அருட்தந்தை ஜான் பிரிட்டோ, ஏழை, எளிய மாணவர்கள் பலரும் உயர்கல்வி பெற உதவியதுடன், அவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறவும் உறுதுணையாக இருந்துள்ளார். அவரது பிரிவால் வாடும் செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.