இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பாட்லிங் பிளான்ட்-ல் ஓட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டத்தை முன்னெடுத்த ஓட்டுனர்கள் செல்வம், பொன்னர் ஆகியோரை ஒரு மாத காலத்திற்கு மேலாக ஆலைக்குள் வரவிடாமலும் , வேலை வழங்காமலும் பழிவாங்கும் நோக்கத்தோடு ஆலை நிர்வாகம் மற்றும் வாகன உரிமையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், பழிவாங்கும் போக்கை கைவிடக் கோரியும் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் சார்பாக சிலிண்டர் வாகன ஓட்டுனர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பழிவாங்கப்பட்ட ஓட்டுனர்களுக்கு நீதி வேண்டியும், கோரிக்கையை வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். கேஸ் சிலிண்டர் லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் காரணமாக திருச்சி மண்டலம் முழுவதும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சிலிண்டர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.