Rock Fort Times
Online News

முதலமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி

 

திருப்பத்தூர் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை கிரிக்கெட் போட்டி திருப்பத்தூரில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் டாக்டர் வி. குணசுந்தரி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சேது ராஜன், திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் விளையாட்டு சங்க தலைவர் சுந்தர் உட்பட கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்கும் 12 அணிகளுக்கிடையே நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியினர் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தகுதி பெறுவா்.மேலும் இதில் வெற்றி பெறும் அணியின் வீரர்களுக்கு தமிழக அரசு விளையாட்டு துறையின் சார்பாக தலா 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர். இதில் மாவட்ட விளையாட்டு துறையின் சார்பாக போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வித பாதுகாப்பு வசதிகளும் அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்திருந்த நிலையில் மாவட்டம் முழுவதிலிருந்தும் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்

 

 

 

 

 

 

 

 

.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்