Rock Fort Times
Online News

ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சத்தை இழந்த போலீஸ் ஏட்டு தற்கொலை…!

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே உள்ள வெள்ளாம்பரம்பூரை சேர்ந்தவர் புகழேந்தி(45). திருமணமான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் உள்ள இவர் தொடர்ந்து பணம் செலுத்தி ரம்மி விளையாடியதாக கூறப்படுகிறது.  அந்தவகையில் அவர் ரூ.25 லட்சம் வரை இழந்துவிட்டதாக தெரிகிறது.  இதனால், விரக்தியில் இருந்த அவர் கடந்த 13ம் தேதி விஷத்தை தின்றுவிட்டு பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.  இதற்காக அவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். இதுபற்றி புகழேந்தியின் குடும்பத்தினர் நடுக்காவேரி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்