Rock Fort Times
Online News

காவல்துறையை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்….

ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் பங்கேற்பு...

காவல்துறையை மேம்படுத்துவது தொடர்பாக 5-வது போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தலைவராக ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய தலைமையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மத்திய மண்டல காவல்துறைக்கான ஆலோசனை கூட்டம் திருச்சி ஜங்சன் கலையரங்கத்தில் இன்று ( 27.09.2023 ) நடைபெற்றது. ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியும், 5-வது போலீஸ் கமிஷனின் தலைவருமான சி.டி.செல்வம் தலைமை தாங்கினார். பின்னர் அவர், மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

காவல்துறைக்கு கூடுதல் வசதிகளை செய்து கொடுப்பது, மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது, காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாரின் நலன் மற்றும் காவல்துறையில் தேவைப்படும் பல்வேறு அம்சங்கள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. இதுதவிர இணைய வழி குற்றங்களை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், பொதுமக்களை மனிதாபிமானத்துடன் அணுகி சேவையை வழங்க நடவடிக்கை எடுப்பது, காவல்துறையில் கூடுதல் பணிநியமனம், ஊதியம், பணிகளுக்கான நெறிமுறை, போலீசாரின் மனஅழுத்தத்தை குறைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தவெக செயற்குழு கூட்டத்திற்கு மாஸ் என்ட்ரி தந்த விஜய்...! யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..!

1 of 899

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்