Rock Fort Times
Online News

திருச்சியில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்…

திருச்சி மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல்துறையால் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 23 ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படவுள்ளன. இது குறித்து மது விலக்கு பிரிவு சார்பில் கூறியிருப்பதாவது :

திருச்சி மாவட்டத்தில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வகையில் 43 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதனத்தில், வருகிற 23 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் ஐபிஎஸ் முன்னிலையில் விடப்படவுள்ள வாகனங்களை ஏலத்தில் எடுக்க விரும்புவோர், சற்று முன்பாக ஒரு வாகனத்துக்கு ரூ. 2000 வீதம் முன்பணம் செலுத்தி, தங்களது பெயர் மற்றும் விவரங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம். ஏலம் எடுப்போர் ஏலத்தொகையுடன் சரக்கு மற்றும் சேவை வரியும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம். வாகனங்களை பார்வையிட விரும்புவோர் சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் முன்பாகவே பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்