Rock Fort Times
Online News

பணி நிரந்தரம் கோரி சென்னையில் தொகுப்பூதிய செவிலியர்கள் போராட்டம்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இன்று (ஜூலை 21) போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சுமார் 6,500 தொகுப்பூதிய செவிலியர்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்த அவர்கள், தேர்தலின்போது மாநில அரசு அளித்த வாக்குறுதியின்படி தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், நீண்ட காலமாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருவதால், நிரந்தர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியச் சலுகைகள், பணிப்பாதுகாப்பு மற்றும் பிற நலன்கள் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள், தங்களது கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்