காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 19ம் தேதி இடைத்தேர்தல்…!
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலோடு காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, பாஜகவில் சோ்ந்ததால் அவா் தனது சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜினாமா செய்துள்ளாா். இதனால் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.19ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அந்தந்த மாநிலங்களில் காலியாக உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் நடக்கிறது. இதனை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.